தமிழ் இலக்கியங்களிலும்
சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல்
நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.
ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற
சொல் பழந்தமிழ்
இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர
விளையாட்டின் பெயராகப் பயின்று
வருகிறது.
கொல்லக்கூடிய
காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால்
‘கொல்லேறு தழுவுதல்’ என்றும்
சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக்
கண்காட்சியகத்தில்
பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி
நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு
காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை
அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான
விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து
கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல்
வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம்
மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர்.
ஆயர்கள்/
யாதவர்கள் இந்தியா முழுவதும் பரவி
வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல்
சங்க இலக்கியமான கலித்தொகை
என்றுரைக்கிறது.
அதற்கு நச்சினார்க்கினியர்
எழுதும் உரை:
"கூடிக் கொல்லுகின்ற
ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு
(கொம்புக்கு) அஞ்சும்
பொதுவனை மறு பிறப்பினும் ஆயர்
மகள் தழுவாள்." என்பதாகும்
பாடலின் இறுதியில் அடக்கப்பட்ட மற்றும்
அடக்கப்படாத காளைகள்
தொழுவத்தைக் கடந்து
வயல்வெளிகளுக்கு ஓடிவிட்ட பின்னர்
காளைகளும் ஆயர்குல மகளிரும் ஆட்டம்
ஆடும்போது திருமாலையும் அரசனையும்
வாழ்த்துகின்றனர்.
பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள்
ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர்
மக்களிடம் இவ்வேறு தழுவுதல்
நடைபெற்று வந்தது.
ஆயர் குல
இளைஞர்கள் ஊரார் முன்னிலையில்
காளையை அடக்குவர்.
வெற்றி
பெற்ற இளைஞர்களில் மனம்
கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள் ஆயர்
குலப் பெண்.
ஆயச்சியர் குரவைக் கூத்தும் ஏறு
தழுவுதலும்
ஏறு தழுவலுக்கும் குரவைக் கூத்திற்கும்
தொடர்பிருந்தது .
குரவைக் கூத்து
ஏறு தழுவலுக்குரிய நாளுக்கு முதல் நாள்
மாலையிலாவது, ஏறு தழுவும் நாளின்
மாலையிலாவது ஊர் பொதுமன்றே
நிகழும்.
முதல் நாளாயின் தம் காதலரை
ஏறு தழுவுவதற்குத் தூண்டும் பாட்டுகளையும்,
ஏறுதழுவிய நாளாயின் தம் காதலர்
வெற்றியைக் கொண்டாடும்
பாட்டுகளையும் ஆயர் குல மகளிர் பாடுவர்.
ஏறுதழுவுதல் மண வினையுடன்
தொடர்புடையதாய் அமைந்திருந்தது.
காளையை அடக்கிய மணமாகா இளைஞர்
பெண்ணினைப் பரிசாகப்
பெறுவதுண்டு.
இன்று ஏறு தழுவுதல்
என்ற பெயர் வழக்கில் இல்லை.
இருப்பினும் ஏறுதழுவலின் எச்சமாக
இன்றைய ஜல்லிக்கட்டு விளங்குகிறது.
No comments:
Post a Comment